முகாமிலிருந்து வெடித்துப் பறந்த ஆர்.பி.ஜி. க்கள் வீதிகளில்: தொடவேண்டாம் என எச்சரிக்கை
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிச்சம்பங்களினால் முகாமிலிருந்து சிதறிய பொருட்களை தொடுவதை தவிர்க்குமாறு இராணுவத்தினர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
முகாமிலிருந்து ஆட்டிலறிகள் மற்றும் ஆர்.பி.ஜி.க்கள் வெடித்துப் பறந்து வீதிகளில் விழுந்து காணப்படுகின்றன. இவற்றில் சில வெடிக்காதவையாக இருக்கலாம் என்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு இராணுவத் தலைமை கேட்டுள்ளது.

முகாமிலிருந்து ஏதேனும் பொருட்கள் வெளியேறும் பட்சத்தில் அது தொடர்பில் தமது தலைமையகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.
011 381 86 09 மற்றும் 011 243 4256 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொது மக்களிடம் இராணுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
R-06




