செய்திகள்
முக்கிய அரசியல்வாதிகள் நால்வர் மீதான விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்!-
பிரபல அரசியல்வாதிகள் நால்வர் மீதான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன எனவும், விசாரணை முடிவில் அவர்கள் மீதான மேலதிக நடவடிக்கைகள் பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனன.முன்னைய அரசின் பிரபல அரசியல்வாதிகளாக இருந்த இவர்கள் நால்வரும் மோசடியாக சொத்து சேர்த்துள்ளமை தொடர்பில் கிடைத்திருந்த முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்ததாகவும், அவ்விசாரணைகள் தற்சமயம் முடியும் தறுவாயில் உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
n10




