செய்திகள்

ஒபாமாவின் வருகைக்காக எல்லைகளில் பாதுகாப்பு

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியா வரவிருப்பதையொட்டி காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லையில், கூடுதலாக 1,200 எல்லை பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு கூறும்போது, “வெளிநாட்டுத் தலைவர்கள் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், சர்வதே எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பது வழக்கமான பாதுகாப்பு முன்னேற்பாடு” என்றார்.

ஆனால், கடந்த 6-ம் தேதி முதல் எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் அதிகமாக இருப்பதால், ஒபாமா வருகையையொட்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரிலேயே கூடுதல் படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.