செய்திகள்

கூடங்குளம் 2வது அணு உலை மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக மின்சாரம் கிடைக்க வாய்ப்பு

கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டால், தமிழகத்திற்கு கூடுதலாக 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணு உலையில் உள்ள முதல் அணு உலையின் மூலம் முழுமையாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் பட்சத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடங்குளம் அணு உலையால் தமிழகத்திற்கு 1,125 மெகாவாட் மின்சாரம் முழுமையாக கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

N5