செய்திகள்

ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கி என்னவெல்லாம் செய்தார்களோ தெரியவில்லை என்கிறார் மனோஜ் பாண்டியன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை வைத்து எதையெல்லாம் எழுதி வாங்கினார்கள் என்பது தெரியவில்லை என மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் நடந்து முடிந்த இடைத் தேர்தலின், தேர்தல் ஆணைய பார்மில் கைநாட்டு இடப்பட்டது குறித்து விசாரணை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் பி.எச். பாண்டியன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மனோஜ் பாண்டியன் பேசியதாவது : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்கள் குறித்த லாக் புக் விவரங்களை அப்போலோ நிர்வாகம் வெளியிட வேண்டும். இடைத்தேர்தலுக்காக, தேர்தல் ஆணைய பார்மில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டபோது அங்கு இருந்த டாக்டர் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். எதற்காக சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட்டுகள் வரவழைக்கப்பட்டனர், அவர்களை வரவழைத்தது யார், ஏன் வரவழைக்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கம் வேண்டும். மேலும் ஜெ. கன்னத்தில் இருந்த ஓட்டைகளை பார்க்கவில்லை என்று டாக்டர்கள் சொன்னது ஏன்? ஜெ., முகத்தில் இருந்த 4 துளைகளுக்கு காரணம் என்ன என்பதை அப்போலோ விளக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

நன்றி: தட்ஸ் தமிழ்