செய்திகள்

டி.டி.வி தினகரன் அளிக்க பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பதிலை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், தங்களது நோட்டீஸூக்கு வி.கே. சசிகலா தான் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் அதிமுக சார்பில் அனுப்பட்ட கடிதத்தில் கட்சியின் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவர்கள் மட்டுமே பதில் தர வேண்டும் எனவும்,  வி.கே. சசிகலாவோ அல்லது தேர்தல் ஆணைய ஆவணங்களில் உள்ள வேறொரு நிர்வாகியோ பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய ஆவணங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் டி.டி.வி. தினகரன் பெயர் இல்லை என்பதை சுட்டிகாட்டியுள்ள தேர்தல் ஆணையம், மார்ச் 10-ம்தேதிக்குள் சசிகலாவின் கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

N5