செய்திகள்

தமிழகத்தை தலை நிமிர்த்தும் முன் அதிமுகவினரை தலை நிமிர்த்துங்கள்: விஜயகாந்த்

தமிழகத்தை தலை நிமிரச் செய்வேன் எனக் கூறும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதலில் தனது கட்சிக்காரர்களை தலை நிமிரச் செய்யட்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேமுதிக, தாமக, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய விஜயகாந்த், விவசாயமும், நெசவும் தங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கு இரண்டு கண்கள் போன்றது என்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில் வேட்பாளர்கள் கீழே அமரவைக்கப்படுவதை விமர்சித்த விஜயகாந்த், தமிழகத்தை தலை நிமிரச் செய்வேன் எனக் கூறும் ஜெயலலிதா முதலில் தனது கட்சிக்காரர்களை தலை நிமிரச் செய்யட்டும் என்றார்.

N5