செய்திகள்

பலாத்காரம் செய்த பெண்ணை சமரசம் செய்து வாழுமாறு அளித்த தீர்ப்பு சட்டவிரோதமானது : சென்னை உயர் நீதிமனறம்

பாலியல் ரீதியாக சிறுமியாக இருந்தபோது பலாத்காரம் சேய்ந்த பெண்ணை குற்றவாளியுடன் சமரசமாக செல்வதற்காக மத்தியஸ்த மையத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு தவறானது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியாக இருந்தபோது மோகன் என்பவர் பலாத்காரம் செய்ததால் 2009ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இந்த சம்பவம் நீதிமன்றத்துக்கு சென்றபோது , வழக்கை விசாரித்த கடலூர் மகிளா நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு மோகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணும் குற்றவாளியும் மத்தியஸ்ம் செய்து பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றும் கடந்த காலங்களில் தனது இந்த அணுகுமுறை வெற்றி அளித்துள்ளது என்றும் கூறினார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

பல்வேறு பெண்கள் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புக்களும் நீதிபதி தேவதாசின் உத்தரவுக்கு எதிராக பிசராசம் செய்தன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பலாத்கார வழக்கில் மத்தியஸ்த முறையை நாடுமாறு கூறியமை சட்டவிரோதமானது என்றும் கண்டனத்துக்குரியது என்றும் பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.

 [youtube url=” https://www.youtube.com/watch?v=fIg4ncyj7KU” width=”500″ height=”300″]