செய்திகள்

புயலுக்குப் பின்பு இயல்பு நிலைக்கு திரும்பிவரும் காய்கறி விற்பனை

வர்தா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த காய்கறி விற்பனை, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12-ம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை தாக்கிய வர்தா புயலின் காரணமாக, சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், கடைகளில் வியாபாரமும் துவங்கியுள்ளது. புயலால் கடந்த 2 நாட்களாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு போதிய அளவில் காய்கறி வரத்து இல்லாமல் இருந்தது. அதேநேரம் வியாபாரமும் மந்தமாகவே இருந்தது. ஆனால், தற்போது நிலமை சீரடைந்து வியாபாரம் ஓரளவுக்கு நடைபெற்று வருவதாக காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. கேரட் கிலோ 20 ரூபாய் வரைக்கும், பீன்ஸ் கிலோ 35 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது.

N5