செய்திகள்

மெரினா மற்றும் பட்டினப்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு முதல், பிப்ரவரி 12ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு

சென்னை மெரினா மற்றும் பட்டினப்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு முதல், பிப்ரவரி 12ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம், ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் சமூக விரோதிகளை தடுக்கும் வகையில் இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மெரினாவில் பலர் ஒன்றுகூடக்கூடாது என்றும், ஊர்வலம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி, கூட்டம் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெரீனாவில் பல்வேறு காரணங்களுக்காக போராட ஒன்றுகூடுமாறு, சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பரப்பி வருவதாகவும், சட்டவிரோதமாக அவ்வாறு கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மெரினா கடற்கரை பகுதிக்கு யாரெல்லாம் செல்லலாம் என்பது குறித்தும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர், குழந்தைகள், நடைபயிற்சி செய்வோர், ஓய்வு எடுப்பவர்கள்  மெரினாவுக்கு செல்லலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மக்கள் ஒத்துழைக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

N5