வரும் 7ந் தேதி பிரதமர் மோடி 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் சமீபத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில் அடுத்தக்கட்டமாக ஆப்ரிக்கா கண்டத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். வரும் 7ந்தேதி தனது பயணத்தைத் தொடங்கும் மோடி, மொசாம்பிக், தென் ஆப்ரிக்கா, டான்சானியா, கென்யா ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது இந்தியாவில் பருப்பு விலையை கட்டுப்படுத்த ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அதிக அளவில் அந்த உணவுப் பொருளை இறக்குமதி செய்வது, இயற்கை எரிவாயு இறக்குமதி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
N5