முக்கிய விசாரணைகளின் அறிக்கைகள் மார்ச் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்
இடம்பெற்றுவரும் முக்கிய விசாரணைகளின் அறிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தமது ஆணைக்குழுவினால் தற்சமயம் சுமார் 400 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதில் சுமார் 40 முறைப்பாடுகள் பாரதூரமான முறைப்பாடுகள் என்றும் அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார்.
அதன்படி தற்சமயம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் நூற்றுக்கு 80 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
n10




