முச்சக்கர வண்டிகளில் தரமான கட்டண மீற்றர்களை பொறுத்த நடவடிக்கை
நாடு பூராகவுமுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு ஒரே கட்டண முறைமையை கொண்ட கட்டண மீற்றர்களை பொறுத்துவதற்கு தேசிய வீதி போக்குவரத்து தொடர்பான அதிகார சபை தீர்மானித்துள்ளது.
தற்போது முச்சக்கர வண்டிகள் பலவற்றில் பொறுத்தப்பட்டுள்ள கட்டண மீற்றர்கள் தரமானது இல்லையெனவும் ஒவ்வொன்றிலும் கட்டண அளவீட்டு முறைகளில் வித்தியாசங்கள் காணப்படுவதாகவும் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குவிதிகளை விதித்து கடந்த மாதத்தில் வர்த்மானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




