செய்திகள்
முச்சக்கர வண்டிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது!
முச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கட்டண நிர்ணயம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-(30




