செய்திகள்
முஜிபுர் ரஹ்மான் பதவி விலகத் தீர்மானம்!
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
-(3)




