முடிந்தால் கைது செய்யுங்கள்: கொழும்பில் பிவித்திரு ஹெல உறுமய போராட்டம்!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் கைது செய்யக் கோரி பிவித்திரு ஹெல உறுமயவினர் கொழும்பு கேதட்டை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். இனவாதத்தைத் தூண்டிவிடும் வகையிலும், மதப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலும் அவர் செயற்படுவதாக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ்வரனின் கட்அவுட் ஒன்றும் காணப்பட்டது. அந்த கட்அவுட்டின் கைகளில் காணப்படும் சுலோக அட்டையில் “முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என முதலமைச்சர் சவால் விடுவது போன்ற வாசகங்கள் சிங்களத்தில் காணப்பட்டது.
-06




