முதற் பெண்மணி யாழ். பல்கலைக்கழகம் சென்றார்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாரியாரான நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியருமான மைத்திரி விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு முதன்மை உரை ஆற்றுவதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார் .
இதன்போது இவருக்கு விசேட வரவேற்பளிக்கப்பட்டது.
-(3)




