செய்திகள்

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய உறவுகள்

தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுதுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் 28 ஆவது நாளாகவும்  தொடர்ச்சியாக கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று காலை வடமாகாண முதலமைச்சர் போராட்டகாரர்களை சந்தித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

தங்களின் போராட்டம் நியாயமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் நான் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன்.

விரைவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைக்குழு அறிக்கையையும் வெளிப்படுத்துமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவரகள் முதலமைச்சரின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுது, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடுதலைக்கு தாங்கள் முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கோரிக்கை கடிதமொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது வடமாகாண முதலமைச்சருடன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ப.அரியரட்னம், பசுபதிபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.dfh ghkmv

n10