செய்திகள்

முதல் முறையாக கார்த்தி படத்திற்கு கிடைத்த வாய்ப்பு

கார்த்தி, நாகர்ஜுன் நடிப்பில் பிவிபி. சினிமாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடந்துவருகிறது. கதாநாயகியாக தமன்ன நடிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக ஐரோப்பாவின் சேர்பியா தலைநகரம் பெல்கிரேடில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதுவரை தென்னிந்தியாவின் எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பும் இங்கே நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்கால கட்டிடங்கள், மாணவர் சதுக்கம், உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் இந்த பெல்கிரேடில் உள்ளன.