முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எந்த வித நச்சு ஊசியும் ஏற்றப்படவில்லை
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது முன்னாள் விடுதலைபப் புலி உறுப்பினர்களுக்கு உடலை வழுவிழக்கச் செய்யும் ஊசி மருந்துகளை ஏற்றியுள்ளதாக வெளியிடப்படும் தகவல்களை முற்றாக நிராகரிப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு நிராகரித்துள்ளார்.
இது பெளத்த தர்மத்தை பின்பற்றும் நாடு. இதன்படி இராணுவத்தினர் எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் இதற்கிணங்க யாருக்கும் நஞ்சு ஊசிகளை ஏற்றியிருக்க முடியாது. இது தொடர்பான குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். N10




