செய்திகள்
முன்னாள் போராளி என்பதால் நிரந்தர வேலைவாய்ப்பு மறுப்பு
முன்னாள் போராளி என்ற காரணத்தால் நிரந்தர வேலை வாய்ப்பு தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதாக தற்காலிக, புகையிரத கடவைக் காப்பாளராகப் பணியாற்றும் வவுனியா புளியங்குளத்தில் வசிக்கும் பொன்னுச்சாமி கஜந்தன் கவலை தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தம் இடம்பெற்றபோது ஓமந்தைப் பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட இவர், இரண்டரை வருடங்களின் பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின் விடுவிக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட இவர், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றார். குடும்பத்தின் உணவுத் தேவைக்காக புகையிரதக் கடவைக் காப்பாளராக கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிகமாகக் கடமையாற்றிவருகின்றபோதிலும், தொழில் உத்தரவாதமின்றி தற்காலிக வேலையையே மேற்கொள்வதாகக் கூறினார்.
தற்காலிக புகையிரதக் கடவைக் காப்பாளர் தொழிலை நிரந்தரமாக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
புகைப்படத்துறையில் அனுபவமிருந்தும் அதற்கான பொருளாதார வசதிகள் இன்மையால் தனக்குத் தெரிந்த தொழிலை ஆரம்பிக்க முடியாமல் தவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
n10




