செய்திகள்

முப்பது வருட யுத்தத்தில் எவரும் வெற்றி பெறவில்லை

முப்பது வருட  யுத்தத்தில் எவரும் வெற்றி பெறவில்லை என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு  யாழ்.சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

முப்பது வருடகால யுத்தத்தில் பிரபாகரன் வெற்றி பெறவுமில்லை. மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறவுமில்லை.

சோகம், அழுகை, துன்பம், வேதைனை மட்டுமே இருந்தது.

அதேபோல் முப்பது வருடகால யுத்தத்தால் எமக்கு என்ன கிடைத்தது? கஷ்டம், நஷ்டம், பிரச்சினை, வேதனை தான் கிடைத்தது.

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் என்றொரு திட்டம் இருக்கின்றது. அது நல்ல திட்டம். நாம் நன்றாக கற்க வேண்டும். இதனால் மட்டுமே நாம் திரும்பி எழ முடியும் என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

n10