செய்திகள்

முறிகண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் காயம்

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்து  இடம்பெற்றள்ளது, அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற இவ்விபத்தில்ஒருவர் படுகயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கரயன் பகுதியிலிருந்து மணல் ஏற்றிசென்றரிப்பர், குறித்த வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையரதம்மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது, இதன்போது ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கடவையில் புகையிரதம் கடப்பதற்கான சமிங்சை ஒளிர்ந்து கொண்டிருக்கையில் ரிப்பர் வாகனத்தை கடவையில்கடக்க முற்பட்டமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது, விபத்தில் ரிப்பர் வாகனம் கடும் சேதங்களிற்குள்ளானதுடன், புகையிரத்தில் பொருத்தப்பட்டிருந்த கைபிடிகளும், புகையிரதமும் சேதமடைந்துள்ளது, புகையிரத்தின் மிதிபலகையில் பயணிப்பவர்களிற்கு இவ்விபத்து அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
விபத்துதொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முனனெடுத்து வருகின்றனர்.408ca030-ddb3-4e7e-97b9-71b3ee47c966 b17a16d0-fd82-484d-982d-1d9323b21c2b
n10