செய்திகள்

முல்லைத்தீவில் கூடியது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழு

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழு முல்லைத்தீவில் இன்று கூடியது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவினர் இன்றும் மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பதிவு செய்தனர்.

இன்றைய அமர்வில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுவரை 11 மாவட்டங்களில் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான சுமார் 1,500 யோசனைகள் இதுவரை இந்த குழுவிற்கு கிடைத்துள்ளன.

n10