முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை அமைக்க யோசனை
முல்லைத்தீவில் பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலத்தின் தேவையினை உணர்ந்து முல்லைத்தீவு பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு 2014ம் ஆண்டே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட போதும், நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய நிர்மான பணிகளை துரித கதியில் ஆரம்பிப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)




