முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த டான் கைது
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் டான் என்றழைக்கப்படும் நபர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர் முஸ்லிம்கள் மீது தற்கொலை மற்றும் தீ வைத்து எரித்து கொலை செய்வேன் என வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய கோட்டை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பொதுபல சேனா மற்றும் சிங்கலே அமைப்பினர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். -(3)




