செய்திகள்

மூதூர்படுகொலைகள்- 10 வருடங்களிற்கு பின்னரும் நீதியில்லை

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஓரு தசாப்தத்திற்கு முன்னர் மூதூரில் அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர்கள் 17பேரை படுகொலைசெய்தவர்களை நீதியின் முன்னாள் நிறுத்துவதற்கு அரசாங்கம் இன்னமும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சர்வதேமனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக மேலும் அந்த அமைப்பு மேலும் மனிதெரிவித்துள்ளதாவது:

ஆகஸ்ட் 4 ம் திகதி ஆயுதாரிகள் பிரான்ஸை சேர்ந்த பட்டினிக்கு எதிரான அமைப்பின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேரை மூதூர் அலுவலகத்திற்குள் வைத்து படுகொலை செய்தனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவினால் ஏற்படுத்தப்படவுள்ள விசேடநீதிமன்றம்இஇந்த படுகொலை குறித்தும் ஏனையயுத்தகால படுகொலைகள் குறித்தும் விசாரணைகள்இமுழுமையாகவும் நீதியான விதத்திலும் குறிப்பிடத்தக்க சர்வதேச பங்களிப்புடன் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும்.

இந்த படுகொலைகளில் தொடர்புடையவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களின் பதவிகள் எவ்வாறானதாகயிருந்தாலும் அவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும்.

மூதூர் படுகொலைக்கு நீதியை வழங்க தவறியுள்ளமை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பாரியகுற்றங்களிற்கு பொறுப்புக்கூறல் என்பது முற்றாக காணப்படவில்லை என்பதற்கான சிறந்த உதாரணமாகும் என சர்வதே மனித உரிமைகண்காணிப்பகத்தின் சட்டமற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ்ரோஸ் தெரிவித்துள்ளார். பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் படுகொலை விசாரணைகள் கையாளப்பட்ட விதம் யுத்தகுற்ற நீதிமன்றங்களை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பதற்கு ஏன் சர்வதேச பங்களிப்பு அவசியம் என்பதை புலப்படுத்தியுள்ளது.

மூதூரை கட்டுப்படுத்துவதற்காக பல நாட்களாக விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை படையினரிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் பின்னரே இவர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டவர்களில் நான்கு பெண்கள் உட்பட் 16 இலங்கை தமிழர்களும்இ ஓரு முஸ்லீம் உள்ளனர். பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் 2004 சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களிற்குநிவாரண உதவிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.இலங்கையின் உள்நாட்டு யுத்தம் விடுதலைப்புலிகள் 2009 இல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முடிவிற்கு வந்தது.

யாழ்ப்பாணத்தின் மனிதஉரிமைகளிற்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற அமைப்பு கண்ணால்கண்ட சாட்சிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததுஇஅந்த அறிக்கையில் கொலைஇடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட படையினரே இந்த படுகொலைகளை மேற்கொண்டனர் என தெரிவித்திருந்தது. இரண்டு பொலிஸ் காண்ஸ்டபில்களும். இலங்கைகடற்படையினரின் விசேடபிரிவினருமே இதற்கு காரணம்இமூத்த அதிகாரிகள் பொலிஸ் மற்றும் நீதித்துறைஅதிகாரிகள்இந்த படுகொலையை மூடிமறைப்பதில் ஈடுபட்டிருந்தனர் என அந்த அமைப்புகுறிப்பிட்டிருந்தது.

2007 அப்போதையஜனாதிபதி மூதூர்படுகொலைகள் உட்பட 16 பாரியசம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்தார்இஇந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் படையினரால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்தனர்.  பின்னது சர்வதேகண்காணிப்பாளர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.

குறிப்பிட்ட ஆணைக்குழுவின் அறிக்கை செப்டம்பர் 2015 வரை முழுமையாக வெளியாகவில்லைஇமேலும் இராணுவத்தினரை இந்த படுகொலைகளிற்கு காரணமாக்க முடியாது என தெரிவித்து மூதூர்படுகொலைகளில் இருந்து அவர்கள் படையினரை விடுவித்திருந்தனர்இவிடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.

2013 ம்ஆண்டில் சர்வதேச அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட வழக்கை மீளாய்வு செய்யுமாறு ராஜபக்சஅரசாங்கம் கேட்டுக்கொண்டதுஇஎனினும் இதன் பின்னர் சிறிதளவு சட்டநடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை.

சிறிசேனா அரசாங்கம் நாட்டின் பாரதூரமானமனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேவேளை 2015 ஓக்டோபரில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலேயுள்ளன.

குறிப்பாக அரசாங்கம் அவ்வப்போது யுத்தகுற்றங்கள் மற்றும் ஏனைய பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்வதற்கு நீதிப்பொறிமுறையை ஏற்படுத்துவது என்ற தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி வருகின்றது.

2015 ஓக்டோபர் தீர்மானம் சர்வதேசநீதிபதிகள் உட்பட நீதித்துறையினரின் பங்களிப்பு குறித்துவிசேடமாக குறிப்பிட்டுள்ளதுஇநீதிநடவடிக்கைகள் அரசியல் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றப்படுவதை தடுப்பதற்காக இது அவசியமானதுஇஅதன் சுதந்திரம் உறுதிசெய்யப்படுவதற்கும் முக்கியமானது.

சர்வதேசமூகத்தின் பங்களிப்புடன் நீதிமன்றங்களை ஏற்படுத்துவது என்ற அரசாங்கத்தின் வாக்குறுதிக்கும் அரசாங்க அதிகாரிகள் வெளியிடும் முரணாண கருத்துகளிற்கும் இடையிலான இடைவெளி நீதிதொடர்பான விடயங்களில் உண்மையான முன்னேற்றத்தை காண்பதற்கு தடையாக அமைந்துள்ளது. சிறிசேனா தொடர்ச்சியாக வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்து வந்துள்ளார்இஎனினும் வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர கடந்த யூனில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு கருத்து தெரிவிக்கையில்-ஜெனீவா தீர்மானம் குறித்த அரசாங்கத்தன் அர்ப்பணிப்பு உறுதியானது என குறிப்பிட்டார்இஏனைய அதிகாரிகளின் கருத்துக்களும் அரசாங்கம் உறுதியாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் தனது சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சர்வதேதீர்ப்பாயத்துடன் முன்னோக்கி நகரவேண்டும்இஎன மனித உரிமை கண்காணிப்பகத்திக் ரோஸ் தெரிவித்துள்ளார்.

மூதூரில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் பாதிக்கப்பட்ட ஏனையவர்களும் தங்களுக்கு குறிப்பிட்ட நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைக்கும் என முழுமையாக நம்பும் நிலைவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.