மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம் எழுதிய நூல் வெளியீடு வவுனியாவில்
மூத்த செய்தியாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் எழுதிய ‘நினைவுகள் நிகழ்வுகள் நெஞ்சில் மோதும் எண்ண அலைகள்’ என்ற நூல் வெளியீடு எதிர்வரும் இருபத்து ஏழாம் திகதி சனிக்கிழமை வவுனியா கந்தசாமி கோவில் திருமண மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.
வவுனியா வடக்கு வலய ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரன் தலைமையில் நிகழ்வு இடம்பெறும்.
வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், கவிஞர் லதா கந்தையா, வீரகேசரி நாளிதழ் உதவிச் செய்தி ஆசிரியர் ஆர்.ராம் ஆகியோர் சிறப்புரையாற்றுவர்.
எழுத்தாளர் மேழிக்குமரன் வரவேற்புரை நிகழ்த்த ஓய்வு நிலைக் கல்விப் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் அமரர் மாணிக்கவாசகத்தின் மனைவியுமான திருமதி நாகேஸ்வரி மாணிக்கவாசம் ஏற்புரையையும் நன்றி உரையையும் வழங்குவார். நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
மூத்த செய்தியாளர் மாணிக்கவாசகம் கடந்த ஏப்ரல் மாதம் பண்ணிரென்டாம் திகதி இயற்கை எய்தினார்.




