செய்திகள்

மூத்த பத்திரிக்கையாளர் ‘துக்ளக்’ ஆசிரியர் சோ.ராமசாமி காலமானார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சோ.ராமசாமி (82) மாரடைப்பு காரணமாக  இன்று காலை 5 மணி அளவில் காலமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். சோ ராமசாமி  1934 அக்டோபர் 5-ல் சென்னையில் ஸ்ரீநிவாசன், ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார்.

இவர் 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பின‎ராக  பணியாற்றியுள்ளார். பத்திரிக்கை ஆசிரியர்,  வழக்கறிஞர், நகைச்சுவை நடிகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்டவர்.

cho_ramasaamபத்திரிக்கை துறையின் சிறந்த சேவைக்காக 1985 இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.:-06