மூன்று அரச நிறுவனங்களுக்கு கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு
மூன்று அரச நிறுவனங்களுக்கு கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனம்,சதொச நிறுவனம் மற்றும் பனை அபிவிருத்தி அதிகார சபையின் பிரதானிகளை அவ்வாறு அழைத்துள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்தார்.
குறித்த நிறுவனங்கள் தொடர்பில் கடந்த காலத்தில் நடைபெற்ற சில பிரச்சினைகள் அதே போன்று எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.
குறிப்பாக சதொச நிறுவனம் தற்போது பாரியளவில் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அத்துடன் நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் சுனில் ஹதுன்னெத்தி குறிப்பிட்டார்.
n10




