மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினால் மேலும் ஒரு சேவை!
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையானது மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட இலாப நோக்கற்ற வைத்தியசாலையாகும். தெற்காசியாவிலேயே முதலாவது கூட்டுறவு வைத்தியகாலை எனப் பெயர் பெற்ற இவ் வைத்தியசாலையானது 1935 ம் ஆண்டு தொடக்கம் கூட்டுறவாளர்களால் நடாத்தப்பெற்று வருகின்றது. கூட்டுறவுத் திணைக்களம் வைத்தியசாலையின நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தும் வருகின்றது. காரைநகர்இ வலிகாமம் மேற்கு பிரதேச செயலக எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்இ வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலகத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தகவர்கள் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றவர்களாவர்.
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை என்றால் உடனே பல்வேறு முன்னாள் வைத்தியர்களின் பெயர்களைக் கூறி அவர்களிடம் பெற்ற பலனைப் பொதுமக்கள் பெருமையாகக் கூறுவதுண்டு. அவ்வளவுக்கு உச்ச சேவையை மக்களுக்கு வழங்கி நற்பெயரை இவ்வைத்தியசாலை சம்பாதித்துள்ளது.
நீண்டகால வைத்திய சேவையுடன் எம்மிடமிருந்த வளங்களை உபயோகித்து பல்வேறு சேவைகளை நாம் ஆற்றிக்கொண்டிருந்தபோது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பாதிப்புக்கள் வைத்தியசாலைக்கு ஏற்பட்டது. யாழ் குடாநாட்டு மக்களின் இடம்பெயர்வு காலம் ஓர் இருண்ட காலமாக எல்லோராலும் கருதப்பட்டது. இதனால் வைத்தியசாலையின் சொத்துக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டது.
இடம்பெயர்வுக்குப் பின்னர் மக்கள் மீள்குடியமர்ந்ததன் பின்னர் பணிப்பாளர்சபை பொதுச்சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் பல்வேறு முயற்சிகளினூடாக வைத்தியசாலையை முன்னேற்ற பாடுபட்டனர்.
பணிப்பாளர்சபையினர் வைத்தியசாலையின் சேவைகளை முன்னரைப்போன்று கொண்டுசெல்ல பல்வேறு தரப்பினரோடு தொடர்புகளை ஏற்படுத்தினர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பலர் தனியாகவும்இ கூட்டாகவும் பல்வேறு வகையில் உதவி வருகின்றனர். அவர்களது இவ்வாறான பங்களிப்பு பணிப்பாளர்சபைக்கு ஊக்கத்துடன் செயற்பட வழிவகுத்ததுள்ளது. அந்தவகையில், தற்சமயம் கீழ்க்காணும் சேவைகள் நடைபெற்று வருகின்றன.
(1) 24 மணி நேர வெளிநோயாளர் பகுதி சேவையும் (OPD Service) வைத்திய நிபுணர்க
ளின் ஆலோசனை சேவையும் (Consultancy Service).
(2) மருந்தக சேவை (Pharmacy Service).
(3) ஆய்வுகூட சேவைகள் (Laboratory Services).
(4) முதியோர் பராமரிப்பு சேவை (Elders Home Service).
(5) கருவள சிகிச்சை சேவை (Sub Fertility).
(6) கதிரியக்க சேவை (X-Ray Service).
(7) ஊடுகதிர் சேவை (Scan Service).
(8) சலரோக சிகிச்சைப் பிரிவு (Diabetic Centre).
மேலும்இ தற்சமயம் உள்ள சத்திர சிகிச்சை கூடம் முற்றுமுழுதாக நவீன தொழில்நுட்ப முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதற்காக உபகரணங்கள் தற்போதய காலகட்டத்திற்கேற்ப கொள்வனவு செய்யப்பட்டு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இவ்வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு (Emergency Treatment Unit) ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியம்பற்றி பணிப்பாளர்சபை சிந்தித்து செயலாற்றி வருகின்றனர். அதன் முதற்கட்டமாக 30.08.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை அவசர சிகிச்சைப் பிரிவு சுப நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விபத்து மற்று அவசர சிகிச்சை பிரிவிற்கு இரு அவசர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளில் நியமிக்கப்பட்டவாறு நியமிக்கப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதைப்போன்று இலங்கையிலும் அவசர சிகிச்சை பிரிவிற்கான வைத்திய நிபுணர்களின் பயிற்சியை, மருத்துவ பட்டப்படிப்பின் படிப்புகள் நிறுவனம் 2013 ம் ஆண்டு ஆரம்பித்தது. அப்பயிற்சிநெறியை நிறைவுசெய்த 1ம் மற்றும் 2ம் அணி வைத்திய நிபுணர்கள் 2020 ம் ஆண்டிலிருந்து பிரதான வைத்தியசாலைகளில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் ஏனைய பிரதேசங்களைப் போன்று இப்பிரதேசத்திற்கு தள வைத்தியசாலை வசதி இல்லாமையினால் மக்கள் அவசர மருத்துவ சேவைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையையே நம்பியுள்ளனர். இதற்கான மூலகாரணம் இங்கு வைத்தியர்களின் மற்றும் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையே ஆகும்.
காரைநகர்இ வலிகாமம் மேற்கு மற்றும் வலிகாமம் தென் மேற்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு இப்பிரிவு மூலம் நிச்சயமாக பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன் போதனா வைத்தியசாலையை சேரந்த இரு அவசர சிகிச்சை வைத்திய நிபுணர்களான Dr.M.லக்ஸ்மன் ((MBBS (Col.), MD (EM), MRC(EM) மற்றும் Dr.(Mrs.) L. யனோஜினி MBBS, MD(EM) ஆகியோருடன் பணிப்பாளர்சபை தொடர்புகளை மேற்கொண்டு இப்பகுதி மக்களுக்காக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சேவையாற்றி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை அவர்கள் ழுழு மனதோடு ஏற்றுக்கொண்டு எமக்கு ஆலோசனை வழங்கி இருவரும் சுழற்சி முறையில் இங்கு இப்பிரிவிற்கு உதவ முன்வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கையிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளிலும் பணியாற்றியதுடன்இ இத்துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகளிலும் பங்குபற்றி அனுபவம் பெற்றுள்ளனர். அத்துடன் மேலதிகமாக பயிற்சிகளை பிரித்தானியா சென்று நிறைவு செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும்இ இவ்விரு வைத்திய நிபுணர்களும் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து தமது சேவைகளை வழங்குவதாக உறுதியளித்திருப்பது பணிப்பாளர்சபைக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தற்சமயம் எம்மிடமுள்ள நோயாளர் காவு வண்டி (Ambulance) திருத்த வேலைகளும்இ புனரமைப்பு வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு Nவைலைகள் நிறைவடையவுள்ளது. இதற்கான நிதியை சுழிபுரத்தைச் சேர்ந்த திரு.அப்புத்துரை விதானையார் குடும்பத்தினர் வழங்கி உதவியுள்ளனர். இவ்வைத்தியசாலையின் மேலதிக அம்புலன்ஸ் சேவை கருதி பணிப்பாளர்சபை யப்பான் உயர்ஸ்தானிகருடன் தொடர்புகொண்டு ஒரு நோயாளர் காவுவண்டியும், ஒரு நடமாடும் மருத்துவ சேவைக்கான (Mobile Clinic) அம்புலன்சும் கிடைக்கவுள்ளது. மேலும் கூட்டுறவு வைத்தியசாலை என்ற அடிப்படையில் கிராமம்தோறும் தொற்றா நோய்கள் சம்பந்தமாக கருத்தரங்குகள்இ மருத்துவ ஆலோசனைகள்இ மருத்துவ சேவைகள் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
இத்தருணத்திலே எம்மால் மேற்கொள்ளபட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரவை ஆரம்பிக்க நிதி உதவிகளை வழங்கிய IMHO கனடா ஊடாக திரு.பாலன் இரத்தினராசா அவர்களுக்கும், காரை நலன்புரிச் சங்கம், பிரித்தானியா கிளை மற்றும் சத்திர சிகிச்சை நிலைய புனரமைப்புக்காக உதவும் மனிதநேய அறக்கட்டளை ஸ்ரீ லங்கா அவர்களுக்கும் மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கு நான்கு மேலதிக அறைகளை நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கிய ஸ்ரீபதி தில்லையம்பலம் Legacy Project அவர்களுக்கும் எமது மனமாரந்த நன்றிகள் உரித்தாகுக.
இத்தருணத்திலே இவ்வைத்தியசாலையின் கௌரவ மருத்துவ அத்தியட்சகர்இ வைத்திய நிபுணர் சு. சுரேந்திரகுமாரன் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. எம்மால் மேற்கொள்ளப்படும் அனைத்து மருத்துவ சேவை சார்ந்த விடயங்களுக்கும் ஏனைய முன்னேற்றங்களுக்கும் அவரால் வழங்கப்படும் ஆலோசனைகளும்இ ஒத்துழைப்புக்களும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவதாக கருதுகின்றோம்.
எதிர்காலத்தில் கருவள சிகிச்சை நிலையச் செயற்பாடுகளை விஸ்தரித்தல்இ அவசர சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கத் தொடங்கியதும் நோயாளர்களை விடுதியில் தங்க வைத்து சிகிச்சையளித்தல் என்பன புதுப்பொலிவுபெற வாய்ப்புள்ளது. அத்துடன் மிக விரைவில் பாரிய சத்திர சிகிச்சைகள் யாவும் மேற்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற வாசகத்திற்கேற்ப எமது செயற்பாடுகள் தொடர்ந்து பொது மக்களின் அன்றாட தேவைகளை இவ்வைத்தியசாலையின் மூலமாக வழங்க தங்கள் ஆதரவை நாடி நிற்கின்றோம்.
பணிப்பாளர் சபை.




