மெகசின் சிறைக்குள் பாதாள குழுக்களுக்கிடையே மோதல் ஏற்படும் அபாயம்
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டள்ள பாதாள குழுக்களுக்கிடைய பயங்கர மோதலொன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறைச்சாலைக்குள் பிரபல 10 பாதாளக் குழுக்களை சேர்ந்த 100 பேருக்கும் அதிகமானோர் இருப்பதாகவும் இவர்கள் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக சிறையிலிருந்து வெளியே கொண்டு வரும் போது அந்த குழுக்களுக்கிடையே மோதல் நிலைமை ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட தொகைக்கும் மேல் அங்கு சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளமையினாலேயே இந்த நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)




