செய்திகள்

மெதுவாக ஆரம்பித்து மூர்க்கத்தனமாக சுழன்றடித்த கெயில்

 

சிம்பாப்வேயுடனான இன்றைய போட்டி ஆரம்பமான வேளை கிறிஸ் கெயில் தங்களை சாதாரணமாக விடமாட்டார் என்ற உணர்வு, அச்சம் என்றும் சொல்லலாம் சிம்பாப்வே அணியிடம் காணப்பட்டது. எனினும் முதல் ஓவரில் கெயில் சற்று நிதானமாக ஆட வேண்டிய சூழ்நிலை உருவானது. டுவைன் ஸ்மித்தினை ஆட்டமிழக்கச்செய்த இரண்டு பந்துகளுக்கு பின்னர் பன்யன்கார கிறிஸ்கெயிலை எல் பி .டபில்யூ முறை மூலமாக ஆட்டமிழக்கச்செய்வதற்கு நெருங்கி வந்தார். அதன் மூலமாக சிம்பாப்வே இலகுவாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற செய்தி சொல்லப்பட்டது. களத்தடுப்பும் கடினமானதாக காணப்பட்டது.இறுக்கமான களத்தடுப்பு வியூகம் அமைக்கப்பட்டது.

image கெய்ல் ஓரு முறை ஆபத்தான இரண்டாவது ஓட்டத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்-சாமூவேல்சிற்கு ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்காமல் சிம்பாப்வே அவரை விரக்தியடையச்செய்தது. எனினும் அவர்கள் அவர் வழங்கிய வாய்ப்பை பாக்வேர்ட் பொயின்ட் திசையில் தவறவிட்டனர். அதன் பின்னரே அவர்களது மனஉறுதி தடுமாற தொடங்கியது. ஓட்டை விழுந்த வண்டிச்சக்கரத்தினூடாக காற்று வெளியேறுவது போன்று அவர்களது திடம் மிகவேகமாக குறைந்தது.தடுத்திருக்க வேண்டிய ஓரு ஓட்டத்தை வழங்கியதன் மூலமாக அவர்கள் கெயில் 50 ஓட்டங்களை எட்டுவதற்கு உதவினர். கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் விளையாடியது போல இல்லாமல் சாமுவேல்ஸ் நிதானமாக விளையாடினார்.சுழற்பந்து வீச்சாளர்களை கண்மூடித்தனமாக அடித்து ஆட அவர் முற்படவில்லை.கெயிலும் அவ்வாறே விளையாடினார். எனினும் ஓரு பந்திற்கு ஓரு ஓட்டம் என்றளவிற்கு பெற்றார். சிக்சர்களை அடித்தவேளை அவைசரியாக அடிக்கப்பட்டன.ஏனைய சந்தர்ப்பங்களில் பந்துவீச்சாளர்களிடமிருந்து ஓன்று, இரண்டு என பெற்றார். 35 ஓவர்வரை மைதானத்தில் திரண்டிருந்த அதிகளவான சிம்பாப்வே இரசிகர்கள் தங்களுக்கு ஓரு விக்கட் வேண்டும் என கேட்டவண்ணமிருந்தனர். போட்டி முழுவதும் காணப்பட்ட மெல்லிய மழை தூறல் போல ஓரு ஓட்டத்தின் மூலம் கெயில் தனது சதத்தை பெற்றார். அவர் மிகவும் அமைதியாகவே கொண்டாடினார். அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கு மாறத்தொடங்கியது.வேகமற்ற ஆனால் சரியான விதத்தில் பந்துவீசக்கூடிய பன்யங்காரவை தண்டித்தார் கெயில்.இது சிம்பாப்வேயை பதட்டப்படுத்தியது.

Cricket WCup West Indies Zimbabwe40 ஓவரில் நோபோல் ஓன்றினை கட்ச் குடுத்தார், பின்னர் பிறீ கிட்டினையும் கட்ச் கொடுத்தார் கடைசி பந்தை சிக்சர் அடித்தார். அடுத்த பத்துஓவர்கள் சிம்பாப்வே நினைத்துப்பார்க்க முடியாதவையாக காணப்பட்டன.சகலதும் சகலரும் காணமற்போயினர்.சகல வகைபந்துகளும் அடித்துநொருக்கப்பட்டன. கெயில் களைத்தவர் போல காணப்பட்டார் ஆனால் அவர் கண்மூடித்தனமாக அடிக்கவில்லை. களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு நடுவில் அடித்தார்,அவர்களுடைய தலைக்கு மேலே அடித்தார். இரட்டை சதத்தை அடிப்பதற்கு அவர் அடித்த சொட் குறித்து குறிப்பிடவேண்டும்,அது களத்தடுப்பில் காணப்பட்ட இடைவெளியை அற்புமாக பிளந்து சென்றது. அவர் ஓரு நாள்போட்டியில், உலககிண்ணத்தில் இரட்டை சதம் பெறுவது எவ்வளவு மகிழ்ச்சிகரமானதோ அவ்வளவிற்கு கொண்டாடினார்.