மேஜர் ஜெனர ல் சுமித் மானவடு வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த மகிந்த
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமான செய்தியைக் கேள்வியுற்ற மகிந்த ராஜபக்ச உடனடியாக, அவரது வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுத் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, நேற்றுமுன்தினம் மரக்குற்றியொன்று தலையில் வீழ்ந்து படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமானார்.
இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்றதும், மகிந்த ராஜபக்ச, மேஜர் ஜெனரல் மானவடுவின் இல்லத்துக்குச் சென்று, குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.
n10




