செய்திகள்
மேலதிக இ.போ.ச பஸ்கள் சேவையில்
தனியார் பஸ் சங்கங்கள் சில நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை முதல் சேவை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அதனால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைகளை ஈடுசெய்யும் நோக்கில் இ.போ.ச பஸ்கள் பல இன்று முதல் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த பஸ்களுக்கு விசேட பாதுகாப்புகளை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வழமைக்கு மாறாக இன்றைய தினம் 1500ற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)




