மே 16இல் தமிழக சட்டசபை தேர்தல்
இந்தியாவின் ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16ஆம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நசீம் சைதி அறிவித்துள்ளார்.
கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அதே தினம் தேர்தல் நடக்கும்.
வாக்கு எண்ணும் பணிகள் மே 19 இல் ஆரம்பித்து மே 21 ஆம் தேதிக்கும் முன்னதாக முழு முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்மனுக்களை ஏப்ரல் 29க்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.
n10




