மைதானம் கிடைக்காவிட்டால் காலிமுகத்திடலுக்கு செல்வோம் : மகிந்த அறிவிப்பு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி நடத்தப்படவுள்ள பேரணியின் இறுதி நாளின் பொதுக் கூட்டத்திற்கு கொழும்பில் மைதானங்கள் கிடைக்காவிட்டால் காலி முகத்திடல் புல்வெளியில் கூட்டத்தை நடத்துவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள அவரின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் தலதா மாளிகையில் விசேட வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தி பேரணியை நடத்தவுள்ளோம். அந்தப் பேரணி கொழும்புக்கு வந்த பின்னர் கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்தக் கூட்டத்திற்காக மைதானங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எவ்வாறாயினும் இறுதியில் காலி முகத்திடலைதான் அதற்காக பயன்படுத்த வேண்டிவரும். என அவர் தெரிவித்துள்ளார்.
R-06




