செய்திகள்

மைத்திரிக்கும் , டில்ருக்‌ஷிக்கும் தெரிந்த ரகசியத்தை மகிந்தவுக்கு கூறியது யார்?

டுபாய் வங்கியில் காணப்படும் ராஜபக்‌ஷக்களுக்கு சொந்தமானதாக கருதப்படும் கணக்கு விபரங்களை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சிய மன்னருக்கு அனுப்புவதற்கான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளர் டில்ருக்சி விக்கிரமசிங்கவின் கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு ஒரு மணித்தியாலத்திற்குள் மகிந்த ராஜபக்‌ஷ மைத்திரிக்கு தொலைபேசி மூலம் அது தொடர்பாக கேட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பல மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளதாகவும் ஆனால் ஜனாதிபதியும் , இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளருக்கும் மட்டும் தெரிந்த குறித்த கடிதம் தொடர்பான விடயம் எவ்வாறு மகிந்தவுக்கு தெரிய வந்தது என்பது தொடர்பாக பிரச்சினையுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)