செய்திகள்

மைத்திரிக்கு எதிரான இன்றைய லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுங்கள்: பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை

லண்டனில் இன்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரித்தானிய தமிழ் மக்கள் ஏற்பாடு செய்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இது தொடர்பில் தமிழ் இளையோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரித்தானிய அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்குபெறுவதற்காக நாளை சிறிலங்காவில் இருந்து புறப்பட இருக்குறார் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால. இரண்டு நாட்கள் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் நாளை மறுதினம் 12ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பங்குகொள்ளும் மாநாட்டில் மைத்திரி கலந்துகொள்ளவுள்ளார்.இனப்படுகொலை கூட்டுக் குற்றவாளி பங்கு கொள்ளும் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வருகை தருமாறு தமிழ் மக்களை கேட்டுகொள்கின்றோம்.

போராட்ட நேரம் சிலவேளைகளில் மாற்றம் செய்யப்படலாம், மேலதிக விபரங்களுக்கு எங்களுடைய சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளத்தினை பார்வையிடுங்கள்.