செய்திகள்
மைத்திரிக்கு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு!
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18 ஆம் திகதி வரையில் அமுலுக்கு இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
-(3)




