செய்திகள்
மைத்திரியின் அப்பக் கடை : சு.க தலைமையகத்தை பார்த்து மகிந்த ஆதரவாளர்கள் கூச்சல்
மகிந்த அணியின் பாதயாத்திரை கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்திற்கு முன்னால் பயணித்த போது பாதயாத்திரையில் கலந்துக்கொண்டோர் மைத்திரியின் அப்பக்கடையென அதனை பார்த்து கோசங்களை எழுப்பிக்கொண்டு சென்றனர்.
கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரைய நேற்றைய தினம் கொழும்மை வந்தடைந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள மருதானை டார்லி வீதியூடாக லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்தது.
இதன்போது கட்சி தலைமையகத்திற்கு முன்னால் பாதயாத்திரை பயணித்த போது கட்சி அலுவலகத்திற்கு முன் பட்டாசுகள் கொழுத்தி ”ஊ” சத்தங்களை இட்டு இந்த கட்சி மகிந்தவுடையது , இப்போ மைத்திரியின் அப்பக் கடையாக மாறியுள்ளது. மீண்டும் இதனை கைப்பற்றுவோம் என தெரிவித்து யாத்திரையில் கலந்துக்கொண்டோர் கூச்சலிட்டனர்.
இதேவேளை பாதயாத்திரையில் கலந்துக்கொண்ட சிலர் கட்சி அலுவலகத்திற்குள் செல்லவும் முயற்சித்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும அந்த இடத்திற்கு வந்து கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென தெரிவித்து அவர்களை அங்கிருந்து அழைத்துச்சென்றார்.




