செய்திகள்

மைத்திரியின் ஆயுட்காலம் பற்றி ஜோதிடம் கூறிய விஜித ரோஹன கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆயுட்காலம் பற்றி சமூக வலைத்தளங்களினூடாக வதந்திகளை பரப்பி வந்த ஜோதிடர் விஜித ரோஹன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மதங்களாக இவர் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதியின் ஆயுட்காலம் தொடர்பாக தனது ஒளிப்பதிவு வீடியோக்களை வெளியிட்டு ஜனாதிபதியின் கிரக பெயர்ச்சியால் இறந்துவிடுவார் என அதற்கான காலப்பகுதியையும் குறிப்பிட்டு வதந்திகளை பரப்பியிருந்தார்.
இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கைக்கு வந்திருந்தபோது துப்பாக்கி பிடியால் அவரை தாக்கி கொலை செய்ய முயற்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. -(3)