”மைத்திரியின் நியமனம் சட்டவிரோதமானது” : வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அந்த கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை மத்திய குழு உறுப்பினரான அருண பிரியந்த மற்றும் அசங்க ஶ்ரீநாத் ஆகியோரினால் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கை தொடருவதற்கு சட்ட ரீதியான காரணங்கள் கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த மனு மீண்டும் பெப்ரவரி 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென நீதவான் தெரிவித்துள்ளார். -(3)




