செய்திகள்
மைத்திரியை கொலை செய்ய முயற்சித்தவருக்கு 10 வருட சிறை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2005ம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது பொலன்னறுவையில் அவரை கொலை செய்ய கிளைமோர் குண்டை வைக்க முயற்சித்தாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு 10 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் நீதிமன்றம் அவருக்கு 10,000 ரூபா அபராதமும் விதித்துள்ளது.
சிவராஜா ஜெனீவன் என்ற பெயருடைய மொஹமட் சுல்தான் காதர் மொஹைதீன் எனும் பிரதிவாதி இன்று பொலன்னறுவை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி அமேந்திர செனவிரத்ன இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
குற்றவாளி 10,000 ரூபா தண்டப் பணம் செலுத்த தவறினால் மேலும் ஒரு வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்துள்ளார். சந்தேகநபர் சில வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




