செய்திகள்

மைத்திரி தலைமையில் 18 திகதி போர் வெற்றிக் கொண்டாட்டம்: மகிந்தவுக்கு அழைப்பில்லை

பாராளுமன்ற மைதானத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி நடை­பெற­வுள்ள இரா­ணுவ வெற்றி தினத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே இந்த விழாவில் இம்­முறை அவர் கலந்­து­கொள்ள முடி­யாது என பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேன தலை­மையில் அமை­தி­யான முறையில் இம்­முறை வெற்றி தினம் கொண்­டா­டப்­படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்­பிட்­டது. எதிர்­வரும் 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இரா­ணுவ வெற்­றி­தின நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளதா என நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வின­வி­ய­போதே பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

“இரா­ணுவ வெற்றி தினக் கொண்­டாட்­டத்தில் கலந்துகொள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை. கடந்த முறையும் அவ­ருக்கு நாம் அழைப்பு விடுக்­க­வில்லை. ஏனெனில் யுத்த வெற்றி தின நிகழ்வு ஜனா­தி­பதியின் தலை­மையில் தான் இடம்­பெறும். இதில் அர­சியல் மேடை­க­ளுக்கு எந்த அனு­ம­தியும் இல்லை. இம்­முறை இரா­ணுவ வெற்றி தினத்தில் யுத்­தத்தில் உயிர் நீத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு நினைவு அஞ்­சலி செலுத்­தவும், இரா­ணுவ வீரர்­களை கௌர­வப்­ப­டுத்துவதற்குமான நிகழ்­வு­களும் நடை­பெறும். அது தவிர எவ­ரது புகழும் இதில் பறை­சாற்­றப்­ப­டாது.

மேலும் இம்­முறை நாம் மிகவும் எளி­மை­யான வகையில் இரா­ணுவ வெற்றி தினத்தை கொண்­டா­டு­கின்றோம். அனா­வ­சி­ய­மான செல­வுகள், அனா­வ­சி­ய­மான விளம்­ப­ரங்கள் அனைத்­தையும் நாம் நிரா­க­ரித்­துள்ளோம். அதற்கு பதி­லான இன ஒற்­று­மை­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்படுத்தும் வகையில் செயற்பட தயாராகியுள்ளோம். அதை குழப்பும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றார்.
R-06