மைத்திரி- மோடி சனிக்கிழமை சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை புதுடெல்லியில் சந்திப்பு இடம்பெறும் என்று ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடைபெறும் இந்து மத விழாவில் பங்கேற்க, பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை ஏற்று, இந்தியா செல்லும் போதே, இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
n10




