செய்திகள்

மைத்திரி – ரணில் அரசாங்கத்தையும் கவிழ்ப்போம் : ஜே.வி.பி

ராஜபக்‌ஷ ஆட்சியை போன்று தற்போதைய ஆட்சியையும் கவிழ்க்க முடியுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜபக்‌ஷ ஆட்சியையே கவிழ்த்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது அத்தனை பெரிய விடயமில்லை. மக்கள் அணி திரண்டால் ஆட்சியை கவிழ்க்க முடியும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)