மைத்திரி – ரணில் ஆட்சி தொடர்ந்தால் நாடு வெளிநாட்டுமயமாகிவிடும் : மகிந்த
இலங்கையை வெளிநாட்டு மயப்படுத்தும் வேலைத்திட்டங்களையே அரசாங்கம் முன்னெடுத்து செல்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தற்போது அரசாங்கம் இலங்கையிலுள்ள அரச வளங்களை வெளிநாடுகளுக்கு விற்று வெளிநாட்டு மயப்படுத்தவே முயற்சிக்கின்றது. இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நீறுவனத்திற்கு வழங்குகின்றது. இதில் சீனாவை குற்றம் சுமத்தி பலனில்லை. இதேபோன்று கொழும்பு துறைமுகத்தின் பகுதியொன்றையும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்திற்கும் இந்த நிலைமை வரலாம். இப்படியே போனால் நாடு வெளிநாட்டு மயப்படுத்தப்பட்டு எமது எதிர்கால சந்ததியினருக்கு நாடே இல்லாது போய்விடும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




