மைத்திரி – ரணில் முரண்பாடு: சமரசத்துக்காக அவசரமாக கொழும்பு திரும்புகின்றார் சந்திரிகா
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தொடரும் முரண்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இரு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெவித்தன.
ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகள் அரசியல் உள்நோக்கத்துடனேயே நடத்தப்படுவதாகவும், இதனைத் தன்னால் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லுரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்ததையடுத்தே அரசியலில் பெரும் சர்ச்சை உருவாகியிருந்தது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் அவருக்குள்ள தேன்நிலவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டிருந்தன.
இந்தநிலையில் தற்போது வெளிநாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாளை மறுதினம் நாடு திரும்புகின்றார். தற்போதைய முரண்பாடுகள் தொடர்பில் இரு தரப்பினருடனும் அவர் பேச்சுக்களை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.:06




