செய்திகள்

மொட்டு கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளராக மதன் நியமனம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ மதனவாசனுக்கு நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்துள்ளார்.

-(3)